. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Saturday, June 2, 2012

பாடகர் அருண்மொழி அவர்களுக்கு நன்றி..

 
 
தன் பாடலகளால் உலகத்தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடகர் அருண்மொழி அவர்கள் FACEBOOKஇல் தன்னுடைய FRIENDS listஇல் நம்மை(ராஜாரசிகர்கள்)யும் இணைத்திருக்கிறார் என்பதை பெருமையுடன் சொல்லிகொள்ள ஆசைப்படுகிறேன்.....

புல்லாங்குழல் இசைக்கலைஞனான அண்ணன் அருண்மொழி அவர்களுக்கு... ராஜாரசிகன் சார்பாக ,இசைஞானியின் இந்த புல்லாங்குழல் பின்னனி இசையின் மூலம் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.




உங்கள் பாடல்களை போல.. உங்களின் புல்லாங்குழல் இசையும் எங்களுக்கு உயிர் போன்றது..

Wednesday, March 28, 2012

MANO 25 YEARS OF MUSICAL JOURNEY





1986ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவிழி வாசலிலே' படத்தில் இடம் பெற்ற 'அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே' என்ற இளையராஜாவின் இசையில் உருவான பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான மனோ, இதுவரை 16 மொழிகளில் 22000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி வருகிறார்.

இவருடைய குரலில் ஒலித்த சின்ன தம்பி படத்தில் இடம்பெற்ற 'அட உச்சஞ்தலை உச்சியிலே', 'தூளியிலே ஆடவந்த', நாயகன் படத்தில் இடம்பெற்ற 'நீ ஒரு காதல் சங்கீதம்',எங்க ஊரு பாட்டுகாரனின் செண்பகமே செண்பகமே போன்ற புகழ்பெற்ற பாடலகளோடு சமீபத்தில் வெளியான மங்காத்தா படத்தில் இடம்பெற்ற 'மச்சி ஓப்பன் தி பாட்டில்' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பாடல்களாகும்.
ஒரு பாடகராக மட்டும் இன்றி ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மனோ. கமல்ஹாசனுடன் இணைந்து 'சிங்கார வேலன்' படத்தில் நடித்த மனோ, 250 நாடகங்களிலும், 3000 இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் மனோ காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகின்றது. மனோவின் இந்த 25 வருட கலையுலக சாதனையைப் பாரட்டும் வகையில், 'சாதகப் பறவைகள்' சங்கருடன் இணைந்து 'கல்யாணகல்பா' நிறுவனம் சென்ற ஜனவரி 26ஆம் தேதி 'மனோ-25' என்ற தலைப்பில் பிரமாண்டமான ஒரு விழாவை நடத்தி முடித்தார்கள்

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 'சாதகப் பறவைகள்' இசைக் குழுவினர் மனோவின் பாடல்களுக்கு இசையமைக்க, பிரபல பாடகர்களும், பாடகிகளும் பாடி அசத்தினார்கள். மேலும் மனோவைப் பாராட்டி பேசுவதற்காக தயரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர், பாடகிகள், இசையமைப்பாளர்கள் என ஏராளமான திரையுலக பிரமுகர்கள் ஆர்வமுடன் கல‌ந்து கொண்டார்கள்.

விஜய் TVயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் இந்த வீடியோவில் கண்டுகளிக்கலாம்..





Tell a Friend

Friday, March 23, 2012

THENDRAL VARUM THERU FILM REWIEW


தென்றல் வரும் தெரு




கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் கதை..அழகான தலைப்பு.
இசை இசைஞானி இளையராஜா.
படத்தில் ரமேஷ் அரவிந்த் ,கஸ்தூரி மற்றும் அபிமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் கதை ,திரைக்கதை ,வசனம் ,பாடல்கள் ஆகியவற்றை கவிஞர் மு.மேத்தா கவனிக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவிற்காகவும்
சண்முகம் எடிட்டிங்காகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்..இயக்கம் கௌரி மனோகர்

கல்லூரியை சுற்றிவரும் கதையில் கல்லூரி Chairman ஆக போட்டியின்றி தேர்வாகிறார் கஸ்தூரி.அதேகல்லூரியில் படிக்கும் கவிஞன் ரமேஷ் அரவிந்த்.
ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள் ஆனால் சொல்லிகொள்ள முடியவில்லை...

தந்தியில் சொல்ல நினைத்த காதலன் ,தந்தியை அனுப்பிவிட்டு வருகையில் கஸ்தூரி தன் திருமண பத்திரிக்கையை நீட்டுகிறார்...இதுக்கு மேல் என்னென்ன நடக்கும் என்று ஒரு சாதாரண சினிமா ரசிகனால் கூட கதையை கணித்து விடலாம்.

ஒரே ஒரு காட்சியை கூட நாம் சினிமா பார்ப்பதை நினைவு படுத்தவில்லை.மாறாக இந்த படத்திற்காக நாம் வீணாக்கிய நேரத்தையும் செலவு செய்த பணத்தையும் தான் நினைவுபடுத்துகின்றன.
சந்தோஷபடும் ஒரே விஷயம் இசைஞானி ..
படத்தையே இசைஞானியின் போட்டோவை முதன்மை கொண்டுதான் துவங்குகிறார்கள்.


பாட்டுக்கள் அத்தனையும் மெஹா hit ...அந்த காலத்தில் மட்டுமல்ல ..இந்த காலத்திலும் ....இந்த படத்தின் காட்சிகள் சரியில்லாத காரணத்தினாலோ என்னவோ தலைவரின் ஈடுபாடு பின்னனி இசையில் குறைவாகவே இருந்தது.ரமேஷ் அரவிந்தும் கஸ்தூரியும் சொன்னதை செய்து விட்டு போகும் பொம்மைகளாக காட்சியளிக்கின்றனர்.சின்னி ஜெயந்த் ,சார்லி என கல்லூரி பட்டாளங்களே நடித்திருந்தாலும் ஆர்வமோடு எதிர்பார்த்த கல்லூரி கலாட்டாக்களும் missing..


மொத்தத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு முறை பார்க்கலம்...சுமார்....its ok...Nice film ..
 என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அவருக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும் இந்த படத்தின் இயக்குனர் கௌரி மனோகர்..


இதோ அந்த படத்தின் பாடல்கள்...






பாடல்களை கேட்கவும் செய்து கொள்ளவும் இங்கே செல்க‌

Thendral Varum Theru - Shakthi.fm Listen, Download & Enjoy Tamil, Hindi MP3 Songs & Albums


இந்த படத்தை பற்றி இன்று நாம் கவனிக்க காரணம் அதில் நம் தலைவரின் பெயர் இசை என்ற பொறுப்புக்கு கீழே வருவதால்தான்... 




Tell a Friend




Related Posts Plugin for WordPress, Blogger...